DA hike from July 2022 for TN Govt employees, pensioners.
On Monday, Tamil Nadu Chief Minister M.K. Stalin announced a 3 percent hike in Dearness Allowances (DA), from 31 percent to 34 percent, for government employees and pensioners. This DA hike is effective from July 2022.
The announcement of the Chief Minister will lead to a burden of Rs 1,947.6 crore to the exchequer and benefit 16 lakh people including serving and retired government employees.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இந்தியாவின் 76ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின விழாவில் உரையாற்றினார். அப்போது அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34% ஆக உயர்த்தப்படும் எனவும் அறிவித்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 2022 ஜூலை 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தப்படும்.
இதன் மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு 1947 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகும்” என்று அறிவித்துள்ளார். தற்போது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும்.
இவ்வகையில், ஜூலை – டிசம்பர் மாதங்களுக்கு அகவிலைப்படி 34% ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் லட்சக்கணக்கான தமிழ்நாடு அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.
Leave a Reply